உலக மகளிர் தின விழாவில் சின்னத்திரை நடிகை ஷர்மிளா பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில் உலக மகளிர் தின விழா ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் நடைபெற்றது
ஒன்றிய கவுன்சிலர் திவ்யா வினோத் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சின்னத்திரை நடிகையும் சமூக ஆர்வலருமான ஷர்மிளா கலந்துகொண்டு
மகளிருக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆறடி நீளம் உள்ள 30 கிலோ எடை கேக்கை ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகை ஷர்மிளா ஆகியோர் வெட்டி கொண்டாடினர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசியவர் ஆண்களை விட பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பெண்கள் புத்திசாலிகள் எனவும் தெரிவித்தார்
தமிழகத்தில் மட்டுமே பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதங்கள் தமிழக அரசு கொண்டு வந்ததாகவும் மற்ற மாநிலங்களை விட தமிழகம் பெண் பாதுகாப்பில் சிறந்து விளங்குவதாக நடிகை ஷர்மிளா தெரிவித்தார்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தார் இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கர் வார்டு உறுப்பினர்கள் உட்பட மகளிர் குழுவினர் பலர் பங்கேற்றனர்.