ஐரோப்பா செய்தி

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்: துருக்கிக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை!

அழகியல் சிகிச்சை முதலான சிகிச்சைகளுக்காக துருக்கி நாட்டுக்குச் செல்லும் பலர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டுவருவதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்குச் செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துருக்கி நாடு, அழகியல் சிகிச்சைகளுக்கு புகழ்பெற்ற நாடு. இன்னொரு முக்கிய விடயம், பிரித்தானியாவை விட அங்கு சிகிச்சைக்கான கட்டணமும் குறைவு.ஆகவே, ஏராளமானோர் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெறுவதற்காக துருக்கிக்கு சுற்றுலா செல்கிறார்கள்.ஆனால், துருக்கியில் சிகிச்சை பெற்ற பலருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினை ஏற்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், துருக்கிக்கு சிகிச்சைக்கு சென்றுவந்த பிரித்தானியர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

 

 

2023 மார்ச், 11 நிலவரப்படி, 14 பேர் துருக்கி சிகிச்சைக்குப் பின் Botulism என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த Botulism என்பது, Clostridium boulinum என்பது போன்ற சில நோய்க்கிருமிகளால் உருவாகும் பிரச்சினையாகும்.

இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களின் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூச்சுத்திணறலும் தசை செயலிழப்பும் ஏற்படும். சிலருக்கு மரணமும் ஏற்படலாம்.ஆகவே, துருக்கியில் சிகிச்சைகளுக்காக செல்வோருக்கு இத்தகைய அபாயம் உள்ளதால், அது குறித்து பிரித்தானியர்களுக்கு உள்துறை அலுவலகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!