ஈரானில் 06 மாதங்களில் 354 பேருக்கு தூக்கு தண்டனை!
ஈரான் இந்த ஆண்டின் முதல் 06 மாதக் காலப்பகுதியில், 354 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் இந்த மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இது 36 வீதம் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டை விட மரணதண்டனையின் வேகம் மிக அதிகமாக இருப்பதாக நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (IHR) அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஈரான் மரண தண்டனையை அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரானில் மரணதண்டனைகளால் பாரசீகம் அல்லாத இனக்குழுக்கள் விகிதாச்சாரத்தில் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)