ஈரானில் இருந்து ஆயுதங்களை சுமந்து சென்ற கப்பல் : வெளிச்சத்திற்கு வந்த ஆதாரம்!
ரஷ்யக் கொடியுடன் கூடிய இரண்டு சரக்குக் கப்பல்கள் ஜனவரி மாதம் ஈரானியத் துறைமுகத்திலிருந்து காஸ்பியன் கடல் வழியாக ரஷ்யாவை நோக்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கப்பலில் ரொக்கெட் லாஞ்சர்கள், மோட்டார் மற்றும் இயந்திர துப்பாக்கிகளுக்கான வெடிமருந்துகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. வெடிமருந்துகளுக்கு மொஸ்கோ பணம் செலுத்தியதாகவும் ஆதரம் ஒன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையிலான போர் நடைபெற்று ஓராண்டை கடந்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் ஆயுதபற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுத உதவிகளை வழங்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் அடிப்படையில் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இவையொருப்புறம் இருக்க முன்னதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு வசதிகளை அழிப்பதற்காக ரஷ்ய பயன்படுத்திய ஆளில்லா விமானங்கள் ஈரானுடையது என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது. இந்த சூழலில் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள கப்பல் ஈரான் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குகிறது என்பதற்கான ஆதாரமாக கருதப்படுகிறது.