இவ்வளவு பெரிய ஐயனார் சிலையா?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளமங்களம் வெள்ளூரணி ஆற்றங்கரையில் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட ஐயனார் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆசியாவிலேயே மிக உயரமான 33 அடி உயர குதிரை சிலையைக் கொண்ட இவ்வாலயத்தில் திருவிழாவின்போது பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றித் தர வேண்டி காகிதப்பூ மாலையை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் முதல் மாலையை காணிக்கையாக செலுத்தினார்.அதனை தொடர்ந்து பக்தர்கள் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
விழாவினை முன்னிட்டு ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட ஐயனார் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது கோவிலைச் சுற்றி பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட அன்னதானக் கூடங்களில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை பரிமாறினார்.
உடன் அமைச்சரின் துணைவியாரும் ஒன்றியக்குழு உறுப்பினருமான சுமதிமெய்யநாதன் உணவுகளை பரிமாறினார். 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 200க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.