இந்தியா செய்தி

இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்கும் சீனா : உளவு பார்க்குமோ என்ற அச்சத்தில் இந்தியா!

இலங்கையின் தொன்ட்ரா விரிகுடாவிற்கு அருகிலுள்ள காடுகளில் ரேடார் தளத்தை அமைக்க சீனா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் இந்திய பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இந்திய பெருங்கடலில் மேற்கத்திய கடற்படை கப்பல்களுக்கு எதிரான உளவு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கும் உதவும் என அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவ தளங்களையும் உளவு பார்க்க சீனாவுக்கு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது.

மேலும் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள இந்தியாவின் நிறுவனங்கள் ரேடாரின் வரம்பிற்குள் இருக்கும் என விஷயத்தை நன்கு அறிந்த நபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம் இதன் மூலமாக கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை கண்காணிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 2017 ஆம் ஆண்டு முதல் 1.12 பில்லியன் டாலர்களுக்கு 99 வருடங்கள் சீனாவிற்கு குத்தைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவை சீனா கண்காணிப்பதற்கும், தாக்குதல்களை முன்னெடுப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!