இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படும் சட்டமூலம் 10 மடங்கு பயங்கரமானது
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலமானது, இருந்த சட்டத்தைவிட 10 மடங்கு பயங்கரமானது என தெரிவிக்கப்படுகின்றது.
சட்டத்துறை பேராசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார்.
“புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. இது பயங்கரமானது. இருந்த சட்டத்தைவிட 10 மடங்கு பயங்கரமானது.
பேரணி சென்றால் அதனை பயங்கரவாத செயல் ஆக்கலாம். நபர்கள் கைது செய்யப்படலாம். அது தொடர்பான செய்திகளை வெளியிட்டால் அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தடுப்பு உத்தரவை வழங்கலாம். அதனை சவாலுக்குட்படுத்த முடியாது.
இந்த சட்டமூலத்துக்கு எதிராக நாம் நீதிமன்றத்தை நாடுவோம். இருந்த சட்டமூலம் பயங்கரமானது என்பதால்தான் அதை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இருந்ததைவிடவும் மோசமான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது” எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.