இலங்கை செய்தி

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியோசிஸ் – பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியோசிஸ் தொற்று நோய் நாட்டில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷஅது குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை எனவும் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

லிஸ்டீரியா Listeriosis மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்றால் ஏற்படும் இந்த நோயால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிக்கை விடுத்து குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

சிவனொளிபாத மலைக்கு சென்ற மேலும் இருவர் உயிரிழந்தமையை அடுத்து இந்த நோய் குறித்த கருத்தாடல் அதிகரித்தது.

எனினும் அவர்களது உயிரிழப்புக்கு லிஸ்டீரியாவால் ஏற்பட்டமை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

மரண பரிசோதனைகளின் போது பெறப்பட்ட மாதிரிகளில் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

 

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை