இந்தோனேசியாவில் புறப்பட்ட 08 நிமிடங்களில் 08 பேருடன் மாயமான ஹெலிகாப்டர்!

இந்தோனேசியாவின் வெப்பமண்டல தீவான போர்னியோவில் உள்ள ஒரு காட்டில் எட்டு பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் புறப்பட்ட எட்டு நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டிண்டோ ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் BK117 D-3, என்ற ஹெலிகாப்டரே மாயமாகியுள்ளது.
இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தான் மாகாணத்தில் உள்ள கோட்டபாரு மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை காலை 08:46 மணிக்கு மத்திய கலிமந்தான் மாகாணத்தில் உள்ள பலங்கரயா நகரத்திற்குச் செல்லும் வழியில் மாயமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்கப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் உட்பட, நிலம் மற்றும் வான்வழியாக தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)