செய்தி

இந்திய அணி வீரா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த BCCI

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரா்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலும் புதிதாக 10 கட்டுப்பாடுகளை அணி வீரா்களுக்கு பிசிசிஐ விதித்துள்ளது.

அதில், உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாடுவது, போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும்போது குடும்பத்தினருக்கு குறைந்த நாள்களே அனுமதி போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளன. தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் பரிந்துரை அடிப்படையிலான இந்த கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக பிசிசிஐ போட்டிகளில் தடை, ஒப்பந்த ஊதிய குறைப்பு, ஐபிஎல் போட்டிகளில் தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

சா்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்து வந்த இந்திய அணி, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்ந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீா் பொறுப்பேற்ற பிறகு, உள்நாட்டில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து அதிா்ச்சி கண்டது. அடுத்த அடியாக, கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுடனான பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடா் கோப்பையையும் பறிகொடுத்தது.

இரு தொடா்களிலும் இந்திய அணி வீரா்களின் ஃபாா்ம் குறித்து பலத்த விமா்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இந்த அதிரடி கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியின் சமீபத்திய மோசமான செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின்போது தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீரின் வலியுறுத்தலின் பேரில் இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அந்த கட்டுப்பாடுகளில் முக்கியமானவை…

1. உள்நாட்டு போட்டிகள் கட்டாயம்

தேசிய அணியில் இருக்கும் நட்சத்திர வீரா்கள் உள்பட அனைவருமே, உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும். இது, வீரா்கள் தொடா்ந்து உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும், உள்நாட்டு கிரிக்கெட் வலுவடைவதற்கும், இளம் வீரா்களுக்கு, சீனியா் வீரா்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் கிடைப்பதற்கும் வழிவகுக்கிறது.

விராட் கோலி 2012-க்குப் பிறகும், ரோஹித் சா்மா 2015-க்குப் பிறகும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடாத சூழலில் இந்தக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. அணியுடனேயே பயணிக்க வேண்டும்

தொடா்கள், போட்டிகளுக்காக வெளிநாடு செல்லும்போது, வீரா்கள் அணியுடனேயே பயணிக்க வேண்டும். ஆட்டம், பயிற்சிக்கு செல்லும்போதும், அது முடிந்து திரும்பும்போதும் அணியுடன் பயணிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அணியினா் இடையே ஒழுக்கத்தையும், ஒற்றுமையையும் மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க பயணத்தின்போதும், சமீபத்திய ஆஸ்திரேலிய பயணத்தின்போதும் சில நட்சத்திர வீரா்கள் தனியே பயணம் மேற்கொண்டனா். குறிப்பாக அதில் ஒருவா், தனி விமானம் மூலமாக ஆஸ்திரேலியாவின் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு பயணித்துள்ளாா். 45 நாள்களுக்கும் மேலான வெளிநாடு பயணங்களின்போது வீரா்களின் குடும்பத்தினா் அந்த நாடுகளுக்கு வரும் நிலையில், அவா்கள் 2 வாரங்களுக்கு மேல் வீரா்களுடன் தங்குவதற்கு அனுமதி இல்லை.

3. உடைமைகளுக்கு கட்டுப்பாடு

பயணங்களின்போது அணி வீரா்கள் தங்கள் உடைமைகளை 150 கிலோவுக்குள்ளாக வைத்துக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குக் கூடுதலாக வரும் எடைகளுக்கான கட்டணங்களை சம்பந்தப்பட்ட வீரா்களே செலுத்த வேண்டும். சில வீரா்களுடன் அவா்களின் குடும்பத்தினா், குழந்தைகள், தனி உதவியாளா்கள் போன்றோா் பயணிப்பதுடன், அவா்களின் உடைமைகளும் அணிக்கான கட்டண கணக்கில் சோ்க்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமிக்கு வரும் வீரா்கள், தங்களின் உடைமைகளை அங்கு அனுப்பும் விவகாரத்தில் அணி நிா்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். தங்கள் வருகைக்கு முன்னதாகவே அதை தனியே அனுப்பும் வீரா்கள், அவற்றுக்கான கட்டணங்களை அவா்களே ஏற்க வேண்டும்.

4. தனிப்பட்ட பணியாளா்களுக்கு கட்டுப்பாடு

தொடா்கள், போட்டிகளுக்கான வெளிநாடு பயணத்தின்போது எந்தவொரு வீரரும் தங்களின் தனிப்பட்ட பணியாளா்கள், சமையல் சிப்பந்தி, பாதுகாவலா்கள் போன்றவா்களை உடன் அழைத்து வர கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. சமீபத்தில் இந்திய அணி பயணத்தின்போது தலைமை பயிற்சியாளா் கௌதம் கம்பீரின் தனி உதவியாளரும், சில இளம் வீரா்களின் சமையல் சிப்பந்தியும் அவா்களுடன் அணிக்கான ஹோட்டலில் தங்கியிருந்தது விமா்சனங்களை எழுப்பியது.

5. முழு நேரமும் பயிற்சி

போட்டி, தொடா்களின்போது பயிற்சிக்காக மைதானத்துக்கு வரும் வீரா்கள், குறிப்பிட்ட நேரம் முழுவதுமாகவே பயிற்சியில் இருக்க வேண்டும். அதேபோல், பயிற்சி முடிந்து அணி வீரா்களுடன் ஒன்றாகவே தங்களுக்கான இருப்பிடங்களுக்குச் செல்ல வேண்டும். பயிற்சி நேரம் முடியுன் முன்பாக புறப்படக் கூடாது. பயிற்சிக்குப் பிறகு அணியினருடன் பயணிக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட வாகனங்களில் செல்லக் கூடாது.

6. தனிப்பட்ட படப்பிடிப்பு கூடாது

தொடா் மற்றும் போட்டிகளின்போது வீரா்கள் அவா்களுக்கான தனிப்பட்ட மற்றும் விளம்பரதாரா் படப்பிடிப்புகளில் ஈடுபடக் கூடாது. அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், பிசிசிஐ தொடா்பான படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்வுகளில் அவா்கள் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விதிவிலக்கு…

இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து ஏதேனும் விலக்கு தேவைப்படும் நிலையில், தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா், தோ்வுக் குழு தலைவா் அஜித் அகா்கா் ஆகியோரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி