இந்தியா செய்தி

இந்தியாவில் வேகமாக பரவும் எக்ஸ்பிபி1.16 : வைத்தியர்கள் எச்சரிக்கை!

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கு எக்ஸ்பிபி1.16 என்ற உருமாறிய தொற்றின் எழுச்சிதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் எக்ஸ்பிபி1.16 வகை பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் எக்ஸ்பிபி1.16 மாறுபாட்டில் பரவல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எக்ஸ்பிபி1.16 வகை கொரோனா பாதிப்புகளை அதிகரிக்க செய்கிறது. ஆனால் இந்த வகை தொற்றால் ஆபத்து தீவிரமாக இல்லை என கொரோனா வைரஸ் குறித்தும் அதன் உருமாற்றம் குறித்தும் ஆய்வு செய்யும் ஆய்வுக் கூடங்களின் கூட்டமைப்பான இன்சகாக்கின் இணை தலைவர் டாக்டர் சவுமித்ரா தாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்ள எங்களிடம் போதுமான தரவுகள் இல்லை. பெரும்பாலான இந்தியர்களிடம் தற்போது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதால் புதிய வகை பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.ஆனால் தொற்றின் தீவிரத்தை எளிதாக கருதமுடியாது என்றார்.

இதே போல ஜெனோ மிக்ஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர் வினோத் ஸ்காரியா கூறுகையில், எக்ஸ்பிபி1.16 வகையால் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளில் இருந்து புதிய மாறுபாடு தப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி