ஐரோப்பா செய்தி

இத்தாலியில் 1,000 பணியிடங்களை நீக்கும் பிரபல நிறுவனம்

இத்தாலியில் உள்ள வோடபோன் நிறுவனம் 1,000 பணியிடங்களை நீக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் (vodafone), ஒரு பெரிய செலவு சேமிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இத்தாலியில் சுமார் 1,000 பணியிடங்களை நீக்க உள்ளது.

இத்தாலியில் தொழிற்சங்கங்களுக்கும், நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு உள் நடைபெற்றது.

அந்த கூட்டம் முடிந்த பிறகு, நிறுவனம் அதன் செயல்பாடுகளை சீரமைக்க தொடரும் ஒரு பெரிய செலவு சேமிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இத்தாலியில் சுமார் 1,000 பணியிடங்களை குறைக்க உள்ளது என்று இரண்டு தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை செயல்முறை வரும் வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கள் மேலும் கூறினர்.

இந்த பணியிடநீக்கம் குறித்து வோடபோன் நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இத்தாலியில் வோடபோன் பணியாளர்கள் மொத்தம் 5,765 ஆக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி