ஆஸ்திரேலியர்களின் நிதி அழுத்தம் மிக உயர்வு – நெருக்கடியில் மக்கள்

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு ஆஸ்திரேலியர்களின் நிதி அழுத்தம் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
ஏறக்குறைய 3500 பேரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ஒவ்வொரு 04 பேரில் ஒருவர் வருமான ஆதாரங்கள் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு சராசரி வேலை நேரங்களின் எண்ணிக்கை 21.9 ஆக இருந்தது, ஆனால் அது இப்போது 22.6 ஆக அதிகரித்துள்ளது.
எனினும் கடந்த 6 மாத கால செலவை விட 3.1 சதவீதம் வருமானம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு பெப்ரவரி சராசரி குடும்பத்தின் வார வருமானம் 1800 டொலர்களாக இருந்தது, ஆனால் தற்போது அது 1629 டொலர்களாக குறைந்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)