இலங்கை செய்தி

ஆளும் கட்சியுடன் ஜனாதிபதிக்கு முரண்பாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் காரணமாகவே ஜனாதிபதியுடன் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலில் அந்த முன்னணியின் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறும்.

எவ்வாறாயினும், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இம்முறை கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (12ம் திகதி) மாலை 5.30 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சர்வதேச நிதியத்தின் நன்மைகள் எவ்வாறு மக்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்தும், டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு வழங்குவதில் எழுந்துள்ள எதிர்ப்புகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சனத் நிஷாந்த உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை.

அந்த முன்னணியின் மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த சந்திப்பை புறக்கணித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவும் நான்கு தடவைகள் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு மாவட்டத் தலைவர்களிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனாதிபதி முன்வரவில்லை.

மாவட்டத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்க வேண்டுமாயின் பின்பற்ற வேண்டிய நடைமுறை ஒன்று இருப்பதாக கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருமுறை அதனைப் பின்பற்றாததற்கு அதிருப்தியையும் வருத்தத்தையும் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை கூட்டத்திற்கு அழைக்க முடியும் எனினும் மாவட்ட தலைவர்களை அவ்வாறே அழைக்க முடியாது என அக்கட்சி முன்னர் சுட்டிக்காட்டியிருந்தது.

இதன்காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களை இந்த சந்திப்பில் ஈடுபடுத்த வேண்டாம் என தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை