ஆலிமா ஹப்ஸிய்யா பட்டம் வழங்கப்பட்டது
அன்னை ஹப்ஸா (ரலி) மகளிர் அரபிக்கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு ஆலிமா பட்டம் வழங்கும் விழா கோவை குணியமுத்தூர் பகுதியில் உள்ள தாஜூல் இஸ்லாம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது..
ஜமாத் தலைவர் முகம்மது இப்ராஹீம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,செயலாளர் அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தானிஷ் அகமது தொழில்நுட்ப கல்லூரியின் இயக்குனர் அக்பர் பாஷா மற்றும் மௌலானா முகம்மது அலி,மற்றும் பேராசிரியர் அபுதாகீர் பாஜூல் பாகவி,காவல் துறை உதவி ஆணையர் சதீஷ் குமார்,
அப்துல் மாலிக் சிராஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஆலிமா முடித்த 13 பெண்களுக்கு தப்ஸிய்யா பட்டம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மதரசாவில் பயின்று வரும் மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக விழாவில் கலந்து கொண்ட உலமாக்கள் ரமலான் மாதத்தின் சிறப்புகளையும்,நோன்பின் மாண்புகளையும் குறித்து பேசினர்.
இந்நிகழ்ச்சியில் முகமது பாரூக் மற்றும் உலமாக்கள்,ஜமாத் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.