செய்தி வட அமெரிக்கா

அயல் வீட்டு நாய்களுக்கு உணவளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப நிலை!

அமெரிக்காவில் பெண் ஒருவர் உரிமையாளர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்கச் சென்ற போது அவரை நாய்கள் கடித்துக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த வியாழக்கிழமை அன்று 38 வயதான கிறிஸ்டின் பாட்டர் என்பவர் தனது பக்கத்து வீட்டு நாய்களுக்கு உணவளிக்க சென்றுள்ளார். அவரோடு தனது மகனையும் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் அவற்றுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரண்டு கிரேட் டேன் வகை நாய்கள் அவரை கடித்திருக்கிறது.திடீரென இச்சம்பவத்தால் பயந்து போன பாட்டரின் மகன் அங்கிருந்து ஓடியிருக்கிறார். இதனை தொடர்ந்து உடனே அவரது மகன் 911 என்ற எண்ணுக்கு அழைத்து அவசர உதவியை நாடியுள்ளார்.

பக்கத்து

அச்சமயத்தில் அப்பெண்ணைக் கடுமையாக தாக்கி கொண்டிருந்த நாய்களை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.அவசர உதவிக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவரை காப்பாற்ற முயன்ற போதும் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

விலங்கு கட்டுப்பாடு அமைப்பினர் வந்து நாய்களை அமைதிப்படுத்தும் வரை அப்பெண்ணை நெருங்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மற்றொரு கிரேட் டான்ஸ் மற்றும் ஒரு பிரெஞ்சு புல்டாக் வகை நாய்கள் வீட்டிலிருந்ததாகவும் ஆனால் அவை தாக்கவில்லை என்றும் பொலிஸார் கூறியிருக்கிறார்கள்.

கிறிஸ்டின் பாட்டரைக் கொன்ற இரண்டு கிரேட் டேன்கள் பின்னர் ஒரு கால்நடை மருத்துவரால் கருணைக்கொலை செய்யப்பட்டன.

 

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!