செய்தி

அமெரிக்காவில் 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்

நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற நபரை விமானத்தில் இருந்த பயணிகள் கட்டிப்போட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விமானம் கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மில்வாக்கி நகரிலிருந்து டாலஸ் நகருக்கு விமானம் பறந்துகொண்டிருந்தது.

விமானங்களில் பயணிகளின் சகித்துக்கொள்ள முடியாத நடத்தை குறித்த சம்பவங்கள் கோவிட்-19 சூழலுக்குப் பிறகு அதிகரித்துள்ளன.

இவ்வாண்டு மட்டும் அது போன்ற குறைந்தது 1,854 சம்பவங்கள் புகார் செய்யப்பட்டுள்ளன.

American Airlines விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானச் சிப்பந்தியிடம் “நான் விமானத்திலிருந்து வெளியேற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

அவரைத் தடுக்கும் முயற்சியில் விமானத்தில் இருந்த ஆண்கள் அவரை மடக்கினர். பிறகு அவர் நகராமல் இருக்க விலங்கையும் பசைப்பட்டையும் வைத்து அவரைக் கட்டிப்போட்டனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!