செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 150 மில்லியன் பேர் TikTok பயன்பாட்டை நிறுத்த வேண்டிய நிலை

அமெரிக்காவில் 150 மில்லியன் பேர் TikTok பயன்பாட்டை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறப்படுகின்றது.

TikTok எனும் சீனாவின் காணொளிக்கான சமூக ஊடகத் தளத்தை அமெரிக்காவில் தடைசெய்ய அரசியல்வாதிகள் பலர் முனைகின்றனர்.

TikTok தளத்தில் தேசியப் பாதுகாப்பு குறித்துக் கவலைகள் எழுந்துள்ள வேளையில் அதனை அமெரிக்காவில் தடை செய்யும் திட்டத்தில் அதிகாரிகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் TikTok தளத்தை 150 மில்லியன் பயனீட்டாளர்கள் மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Shou Zi Chew குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அது பாதியளவு என்று அவர் சுட்டினார்.

எனவே நாட்டில் தளத்தைத் தடைசெய்வது 150 மில்லியன் பேரிடமிருந்து அதைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பறிப்பதற்குச் சமம் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!