அமெரிக்காவில் நாயின் விபரீத செயல் – பற்றி எரிந்த வீடு

அமெரிக்காவின் டுல்சா நகரில், வீட்டில் தனியாக இருந்த வளர்ப்பு நாய் ஒன்று கையடக்க தொலைபேசி பவர் பேங்கை வாயால் கடித்து தீ விபத்து ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது
2 வளர்ப்பு நாய்களை, அதன் உரிமையாளர் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், எங்கோ இருந்த பவர் பேங்கை வாயால் கவ்வி வந்த நாய், தனக்கான மெத்தையில் படுத்தபடி தின்பண்டத்தை மெல்வதைப்போல் பவர் பேங்கை மென்றுவந்தது.
திடீரென பவர் பேங்க் தீப்படித்ததால், அதிர்ச்சி அடைந்த நாய் அதை அப்படியே மெத்தையில் போட்டுவிட்டது.
மெத்தை தீப்பற்றி, அறை முழுவதும் தீ பரவத் தொடங்கியதும், நாய்களுக்கான பிரத்யேக கதவு வழியாக இரு நாய்களும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
(Visited 71 times, 1 visits today)