அமெரிக்காவின் சியாட்டல் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் காயமடைந்தார்
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் பூங்காவில் செவ்வாய்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தத்துடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை இரவு 11:30 மணிக்குப் பின்னர் , துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருவரைக் கண்டுபிடித்ததாக சியாட்டில் காவல் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களுக்கு பொலிஸார் மருத்துவ உதவி வழங்கியுள்ளதுடன் அவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மற்றவர் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





