அபராத தொகையை செலுத்த கடன் வாங்கும் நீரவ் மோடி : இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது எனவும் குற்றச்சாட்டு!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ள நிரவ்மோடி, அபராதத் தொகையை செலுத்த 10 ஆயிரம் பவுண்ட்ஸ் கடன் வாங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவரை நாடுகடத்தக்கோரியும், அதற்கான செலவுத்தொகையை செலுத்த வேண்டும் எனவம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில். இதை எதிர்த்து நீரவ்மோடி நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு லண்டனில் உள்ள பாக்கிங்சைட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் ஆஜரான அவர் மேற்படி அபராதம் செலுத்த கடன் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர். தன்னை நாடு கடத்துவதற்கு எதிரான மேல் முறையீட்டுக்கான செலவு தொகை 150,247 பவுண்டுகள் எனவும், அதனை செலுத்துவதற்கு தன்னிடம் பணமில்லை எனவும் கூறினார்.
என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது . எனவே என்னால் பணம் செலுத்த முடியவில்லை என்றார். அப்போது நீதிபதிகள் அவரிடம் சொத்துக்கள் ஏன் முடக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நீரவ்மோடி பதில் அளிக்கையில், எனது பெரும்பாலான சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன. அங்கு நான் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்றார்.
அப்படியென்றால் அபராதத்தொகையாக மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் எப்படி செலுத்துகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதலளித்த அவர், நான் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு சிறையில் இருக்கிறேன். எனது முதல் 2 வருடங்களில் கையில் இருந்த நிதி செலவாகிவிட்டது.
எனவே கடந்த 2 ஆண்டுகளாக நான் மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் கடன் வாங்கி அபராதம் செலுத்துகிறேன் என்றார்.
உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்றால் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ஏன் இந்தியாவிற்கு திரும்பவில்லை என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு நீரவ்மோடி எனக்கு இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது என்றார்.