அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன்மூலம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வானார்.. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வானார்.
இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுச்செயலாளர் சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் அதிமுக சார்பாக கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வில் அதிமுகவின் மதுரை மாவட்ட பொருளாளர் ராஜா மற்றும் எம் எஸ் பாண்டியன் அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாழ்த்துக்களை தெரிவித்து கோசமிட்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள்.