இலங்கை செய்தி

அடுத்த வாரம் முதல் தொடர் தொழிற்சங்க போராட்டம்!! இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி

அரசாங்கத்தின் சமீபத்திய வரித் திருத்தம் தொடர்பான தொழிற்சங்கங்களுக்கும்  நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற கலந்துரையாடல் உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்தது.

இதனையடுத்து, தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும்.

இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பை தொடர்ந்து, தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் அருண சாந்தஆர்ச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கலந்துரையாடலின் போது எதிர்பார்த்த தீர்வுகள் முன்மொழியப்படவில்லை.

இதேவேளை, சுகாதாரம் மற்றும் தபால் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் எதிர்வரும் வாரத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, திங்கட்கிழமை (மார்ச் 13) காலை 8.00 மணி முதல் மேல், மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏனைய மாகாணங்களில் உள்ள உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட டாக்டர் அலுத்கே, தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் புதன்கிழமை (மார்ச் 15) முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்தார்.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை