வடக்கு ஐரிஷ் பொலிஸாரின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்
வடக்கு அயர்லாந்து, லண்டன்டெரியில் புனித வெள்ளி சமாதான உடன்படிக்கையை எதிர்த்து நடைபெற்ற அணிவகுப்பில் ஏராளமான முகமூடி அணிந்த நபர்கள் பெட்ரோல் குண்டுகள் மற்றும் பிற பொருள்களால் பொலிஸ் வாகனத்தைத் தாக்கியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பெல்ஃபாஸ்டுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக திங்கள்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐரிஷ் தேசியவாத பகுதியான க்ரெக்கனில் நான்கு இளைஞர்கள் ஒரு பொலிஸ் கவச வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்து சென்றதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)