ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்பைடர் மேன்!

பிரான்ஸில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஸ்பைடர் மேன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Vendée நகரில் இச்சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Fontenay-le-Compte எனும் சிறுநகரில் கடந்த சனிக்கிழமை மாலை பொலிஸார் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்போது வீதியில் அங்கும் இங்குமாக அலைமோதி போக்குவரத்து இடைஞ்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தினர்.

வாகன சாரதியை நெருங்கியபோது பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

உள்ளே இருந்தது ஸ்பைடர் மேன் வேடமணிந்த சாரதி ஒருவராகும். மதுபோதையில் இருந்த குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஸ்பைடர்மேனை புகைப்படம் எடுத்த பொலிஸார் அதை தங்களது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!