பார்சிலோனாவின் முக்கிய மருத்துவமனை மீது சைபர் தாக்குதல்!
பார்சிலோனாவின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலில், கணினி அமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக 150 அவசரமற்ற, செயல்பாடுகளையும் முவ்வாயிரம் நோயாளிகளின் சோதனைகளையும் இரத்து செய்ய கட்டாயப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த அமைப்பு எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பது குறித்து எந்த கணிப்பும் செய்ய முடியாது என மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கட்டலோனியா பிராந்திய அரசாங்க அறிக்கையானது, பிராந்தியத்தின் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி அமைப்பை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியது.
எழுதப்பட்ட அனைத்து வேலைகளும் காகிதத்தில் செய்யப்பட்டு வருவதாகவும், புதிய அவசர வழக்குகளை மருத்துவமனை நகரத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றுவதாகவும் மருத்துவமனையின் செய்தித் துறை தெரிவித்துள்ளது.