பள்ளத்தில் விழுந்த மாடு, பாசத்துடன் தழுவிய தீயணைப்பு வீரர்
தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூர் மண்டலத்திற்கு உட்பட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை பணிக்காக ஆங்காங்கே பதினைந்து அடி ஆழத்திற்கு பல்லங்கல் தோண்டப்பட்டு உள்ளது.
அந்த நிலையில் அண்ணா சாலையில் காளை மாடு ஒன்று நடந்து சென்றது அப்போது அந்த மாடு கால் தவறி பல்லத்தின் உள்ளே விழுந்தது இதனை கண்ட அப்பகுதி மக்கள் தாம்பரம் தீ அனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீ அனைப்பு மீட்பு குழுவினர் சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காளை மாட்டை லாவகமாக பள்ளத்தில் இருந்து மீட்டனர் பின்பு அந்த காளை மாடு அவ்விடத்தை விட்டு ஓடின.
மேலும் பாதாள சாக்கடைக்காக தோண்ட பட்ட பள்ளங்கல் சுற்றி எந்த விதமான தடுப்புகளும் இல்லை இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் பொது மக்கள் வயதானவர்கள் நிலை தடுமாறி உள்ளே விழும் சூழல் உள்ளது உயிர் பலி ஏதேனும் ஏற்படுவதற்கு முன்,
மாநகராட்சி நிர்வாகம் இந்த பாதாள சாக்கடை திட்டத்தை கையாளும் ஒப்பந்த்தாரரிடம் இது போன்ற தோண்ட பட்ட பள்ளங்கல் சுற்றியும் தடுப்புகள் அமைக்க உத்தரவு இடவேண்டும் இது சம்மந்தமான அதிகாரிகள் அதனை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமுக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்..