பயணிகளுக்கான கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தல் : அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ஆராயும் ஹீத்ரோ விமான நிலையம்!

விமான பயணிகளுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என தொழில்துறை கட்டுப்பாட்டாளர் தீர்ப்பளித்ததை அடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக ஹீத்ரோ விமான நிலையம் கூறியுள்ளது.
இதன்படி 2022-2026 ஆண்டு வரையான காலப்பகுதியில், பயணி ஒருவருக்கான விமான கட்டணம் சராசரியாக 27.49 ஆக வசூலிக்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு லண்டன் விமான நிலையத்தைப் பயன்படுத்தும் விமான நிறுவனங்களுக்கு இது குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது.
ஹீத்ரோ விமான நிலையம் முதலீட்டை ஆதரிப்பதும், கொவிட் தொற்றுநோயில் இருந்து மீள்வதும் அவசியம் எனத் தெரிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)