பனிப்புயலால் 153 ஆண்டுகால நாளிதழ் வெளியீடு முதல் முறையாக நிறுத்தம்!
வரலாறு காணாத பனிப்புயலால் 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ‘The Boston Globe Newspaper’, தனது தினசரி செய்தித்தாளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளது.
Boston Globe அச்சகம் அமைந்துள்ள மசாசூசெட்ஸ் (Massachusetts) மாகாணத்தின் பிரிஸ்டாலில் 2 அடி உயரத்துக்கு பனி குவிந்துள்ளது.
பனிப்புயலால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதால் நாளிதழ் வெளியீடுவது நிறுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழான ‘The Boston Globe’, 1872-ம் ஆண்டு நிறுவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.





