நெஸ்ட்லே தொழிற்சாலைக்கு வந்த பார்சல்கள்.. பிரித்துப் பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!
சுவிட்சர்லாந்திலுள்ள உணவுப்பொருட்கள் மற்றும் பானங்கள் தயாரிக்கும் நெஸ்ட்லே தொழிற்சாலைக்கு சில பார்சல்கள் வந்தன.அவற்றில் காபிக்கொட்டைகளுக்கு நடுவே போதைப்பொருள் அடங்கிய பொட்டங்கள் இருந்ததால் தொழிற்சாலை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
காபிக்கொட்டைகளுக்கு நடுவே போதைப்பொருள் அடங்கிய பொட்டங்கள் இருந்ததால், சுங்க அதிகாரிகளுக்கு அது குறித்து உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.அதிகாரிகள் வந்து அந்த பொட்டலங்களைக் கைப்பற்றினர். அவற்றில் 500 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருந்தது.
இந்நிலையில், நேற்று தபால் மூலம், குறிப்பாக வட ஆப்பிரிக்காலிருந்து அனுப்பப்பட்ட போதைப்பொருட்களையும் தாங்கள் கைப்பற்றியதாக சுவிஸ் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருட்கள் போக, போலி வயாகரா மாத்திரைகள் உட்பட போலி மருந்துகள் போதப்பொருட்களைவிட அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.