நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் : எதிர்கட்சிகளின் அமளில் சபை ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் திகதி தொடங்கியது. குறித்த கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் பாதி பிப்ரவரி 13ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி திட்டமிட்டபடி இன்று தொடங்கியது.
கூட்டத்தொடர் ஆரம்பித்த உடன், ஆளும் கட்சி உறுப்பினர்கள், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதனைதொடர்ந்து அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்று மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தினார்.
தொடர்ந்து இந்திய ஜனநாயகத்தைக் குறை கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். ராகுல்காந்தி மறுப்பு தெரிவிக்கவே சபையில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.