செய்தி தமிழ்நாடு

தாய் திட்டியதால் 13வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் டி பிளாக் 13வது மாடியில் No-311ல் வசிப்பவர் மோகன் – சூர்யா தம்பதியினர். மோகன் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார்.

இவர்களது 17 வயது மகள் (தாரணி) அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்வில் பங்கேற்க தயாராகி வந்தார்.

இந்த நிலையில் ஹால் டிக்கெட் பெற நேற்று 12 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்ற சிறுமி, பொது தேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்கி கொண்டு இரவு 08:45 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது அவரது தாயார், ஏன் இவ்வளவு லேட் ஆக வந்த ? என்று கேட்டு திட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்த சிறுமி (தாரணி) 13 வது மாடியில் இருந்து இரவு கீழே குதித்து விட்டார்.தலை, கை, கால்கள் மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்ட சிறுமியை உடனடியாக அழைத்து சென்று, தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அறித்த துடியலூர் போலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

தாய் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்த சிறுமியால் குடும்பத்தார் , உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி