செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் ரவுடிகளால் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

கோவை சரகம் ஈரோடு,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள் இடையேயான ஆலோசனைக்கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வட மாநில தொழிலாளர்கள் இடையே இருக்கக்கூடிய அச்சத்தை போக்குவது குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு கூறுகையில்

வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் குழப்பங்கள் தீர்ந்து இயல்பு நிலை திரும்ப  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு பின் பிரச்சனைகள் தீர்ந்து இயல்புநிலை திரும்பி உள்ளதாக குறிப்பிட்டார்.

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர்

காவல்துறை அதிகாரிகள் வடமாநிலத்தவர்கள் இடையே தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்  வடமாநில தொழிலாளர்களின் அச்சம் தற்போது போக்கப்பட்டுள்ளதாகவும், வதந்தி பரப்புவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் இதுவரை 11வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விபத்து போன்ற வீடியோக்கள் தவறாக சித்தரிக்கப்படட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர்,புலன்விசாரணை இறுதியில் யாரெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள் என்ற விவரம் தெரியவரும் என்றார்.

பிரச்சனைகளை உருவாக்கும் பொருட்டு வீடியோக்கள் பரப்பிய விவகாரத்தில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் என கூறினார்.

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

மொபைல் போன் மூலம் நடக்கூடிய முறைகேடுகளை விழிப்புணர்வுடன் தடுக்க வேண்டும் என கூறிய அவர்,மொபைல் போனில் வரக்கூடிய லிங்குகளில் பயனாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் ரவுடிகள் மீது நடத்தப்படும் துப்பாக்கி சூடு குறித்து குறித்தான கேள்விக்கு பதில் அளித்தவர் தமிழகத்தில் அண்மையில் ரவுடிகளால் காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் காவலர்கள் தங்களை தாக்க வரும்போது பாதுகாப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி