ஜெர்மனியில் வழங்கப்பட்ட நிதி உதவி தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
ஜெர்மனியில் கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட நிதி உதவி மீளப்பெற முடியாதது என்று நீதிமன்றம் ஒன்று தற்பொழுது தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெர்மனியில் கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு நிதி உதவிகளை அறிமுகப்படுத்திருந்தது.
2020 ஆம் ஆண்டு கொரோனா காலங்களில் சொவோர்ட்பில்பர் என்று சொல்லப்படுகின்ற கொரோனா நிதியம் ஒன்றை அறிமுகப்படுத்திருந்தது.
இந்த நிதியத்தின் மூலம் பல லட்ச கணக்கான மக்கள் பயனை பெற்றுக்கொண்டார்கள்.
இதேவேளையில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலமானது சோலோ செல்ப் செலிங் என்று சொல்லப்படுகின்ற சிறு தொழில் செய்கின்றவர்களுக்கு தாங்கள் வழங்கிய 9000 யுரோக்களை அவர்கள் தங்களது செலவுகளை தவிர்த்து மீட்டிய பணத்தை திருப்பி தங்களிடம் வழங்குமாறு வேண்டி இருந்தது.
இதேவேளையில் இவ்வாறு சிறுதொழில் செய்கின்றவர்கள் இந்த வேண்டுதலுக்கு எதிராக மாநிலஉயர் நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்கள்.
இந்த மாநில நிர்வாக நீதிமன்றமானது தற்பொழுது இந்த வழக்கு விசாரணை ஆரம்பித்த நிலையில் இந்த விண்ணப்பதாரிகளுக்கு ஆதரவான முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.