ஜெர்மனியில் போக்குவரத்து அட்டையை ரத்து செய்ய திட்டம்
ஜெர்மனியின் பல்கலைகழக மாணவர்களின் போக்குவரத்து அட்டையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜெர்மனியில் 1.5.2023 இல் இருந்து 49 பயண அட்டையான டொஷ்லான் பயண அட்டை நடைமுறைக்கு வந்து இருக்கின்றது.
இந்த பயண அட்டையால் ஜெர்மனியர்கள் போக்குவரத்து தொடர்பில் பயனடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சில பல்கலைகழகங்கள் ஏற்கனவே செமஸ்டர் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற பல்கலைகழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பயண அட்டைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த செமெஸ்டர் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற இந்த பயண அட்டையில் கூடுதலான பல்கலைகழக மாணவர்கள் இவ்வாறான டொஷ்லான் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற பயண அட்டை நடைமுறைக்கு வந்த பின் அவர்கள் நாட்டம் கொள்ளாது இருக்கின்றார்கள் என்று தெரியவந்துள்ளது.
அதாவது பல்கலைகழக மாணவர்கள் செமஸ்டர் டிக்கட்டில் கவனம் செலுத்தாது டொஷ்லான் டிக்கட்டை பயனபடுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.