ஜெர்மனியில் புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதி வழங்கப்படுவது தற்போது குறைவடைந்து இருப்பதாக தற்போது புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கின்றது.
ஜெர்மனி நாட்டில் ஜெர்மன் கட்டிட துறை நிர்மாண அமைச்சானது புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு வழங்கப்படுகின்ற அனுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.
குறிப்பாக கடந்த ஆண்டு 2022 மொத்தமாக கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 304600 ஆக காணப்பட்டுள்ளது.
இதேவேளையில் அரசாங்கமானது வருடம் ஒன்றுக்கு 4 லட்சம் புதிய வீடுகளை கட்டுவதற்கு உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அரசாங்கமானது குறைந்த அளவு வீடுகளை கட்டுவதற்கு குறைந்தளவு அனுமதி வழங்கப்பட்டதன் முக்கிய காரணம் வீடுகளை கட்டுவதற்குரிய நிறுவனங்கள் அதற்குரிய மூலப்பொருட்களை பெற முடியாது உள்ளதை ஒரு விடயம் என்று தெரிய வந்திருக்கின்றது.
இதன் காரணத்தினால் இந்த உத்தேச நிர்ணயத்தை அரசாங்கத்தால் எட்ட முடியாது இருந்ததாகவும் தெரிய வந்தருக்கின்றது.
இதேவேளையில் கடந்த ஆண்டுகளில் இவ்வாறு புதிய வீடுகள் கட்டுவது பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு புள்ளி விபரம் சுட்டிகாட்டுகின்றது.
அதாவது 2016 ஆம் ஆண்டு கோவிட் தொற்று ஏற்படுவதற்கு முதல் மொத்தாக வருடம் ஒன்றுக்கு 346800 வீடுகள் கட்டப்பட்டு இருந்ததாகவும் தெரியவந்திருக்கின்றது.
ஆனால் தற்போது கோவிட் தொற்றுக்கு பின் இந்த கட்டிட துறையானது பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளமை குறப்பிடத்தக்கது.