சூட்கேசில் மனித மாமிசத்துடன் சிக்கிய இளைஞன்: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்
போலி ஆவணங்களுடன் பயணிப்பதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்தார்கள் போர்ச்சுகல் பொலிஸார். ஆனால், விசாரணையில் அவரைக் குறித்த அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமையன்று, போர்ச்சுகல்லின் லிஸ்பன் விமான நிலையத்தில், ஃபெர்னாண்டஸ் (25) என்பவரது ஆவணங்கள் சந்தேகத்துக்குரியவையாக இருந்ததால் அவரைக் கைது செய்து காவலில் அடைத்தார்கள் பொலிஸார்.அத்துடன் அவரது சட்டையில் இரத்தக்கரை இருக்கவே, அவரது சூட்கேசை சோதனையிட்டபோது, பெரிய பெரிய பார்சல்களில் ஏதோ மாமிசம் இருப்பது தெரியவந்தது. அவை மனித மாமிசமாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தார்கள்.
அந்த மாமிசம் பரிசோதனைக்காக சிறப்பு ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஃபெர்னாண்டஸின் பின்னணி குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தும்போது, அவர் ஞாயிற்றுக்கிழமை நெதர்லாந்து நாட்டில் நடந்த ஒரு கொலைக்காக தேடப்படுபவர் என்பது தெரியவந்தது. அதாவது, பிரேசில் நாட்டவரான ஃபெர்னாண்டஸ், நெதர்லாந்தில் வாழும் தன் நாட்டவரான ஆலன் (21) என்பவர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அந்த வீட்டில் ஏதோ சண்டை நடப்பதை அறிந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பொலிஸாரை அழைத்துள்ளார்கள்.
அத்துடன், ஆலனுடைய நண்பர்களும், ஆலன் தங்கள் மொபைல் அழைப்பை ஏற்காததால் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்கள்.பொலிஸார் அந்த வீட்டுக்குச் சென்றபோதுதான், ஆலன் கொல்லப்பட்டுக் கிடப்பதும், அவரது உடல் பாகங்கள் சில காணாமல் போயிருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆலனுடைய உடல் பாகங்கள் சிலவற்றை ஃபெர்னாண்டஸ் உண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆன்ஸ்டர்டாமில் ஆலனைக் கொன்றுவிட்டு, போர்ச்சுகல்லின் லிஸ்பன் விமான நிலையம் வழியாக தன் சொந்த நாடான பிரேசிலுக்குத் தப்பியோட முயன்ற ஃபெர்னாண்டஸ் பொலிசாரிடம் சிகிக்கொண்டுள்ளார்.பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.