செய்தி தமிழ்நாடு

சுங்குடி சேலைகளை அணிந்து மகளிர் தினத்தை கொண்டாடிய சிறைவாசிகள்

மதுரையில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் சிறைவாசிகளுடன் சிறையில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் இணைந்து சுங்குடி சேலைகளை அணிந்து மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

பெண்களின் மகத்துவத்தை பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும்  மார்ச் 8 ஆம் தேதி நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக மதுரை பெண்கள் தனிச்சிறையில் உள்ள பெண் சிறைவாசிகளுடன் சிறையில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் இணைந்து சிறைவாசிகளின் கைவண்ணத்தில் உருவான சுங்குடி சேலைகளை அணிந்து மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை சிறைத்துறை சரக துணைத்தலைவர் பழனி மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் எஸ்.வசந்தகண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

மேலும் மதுரை பாத்திமா மற்றும் லேடி டோக் கல்லூரி (தனியார் கல்லூரி) மாணவிகள் 50 மேற்பட்டோர் கலந்து கொண்டு பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, நாடகம் உள்ளிட்டவை அரங்கேற்றினார்.

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி