ஆசியா செய்தி

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் ஒருவர் மர்ம மரணம்

சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேராவில் (Bukit Merah) உள்ள ரெட்ஹில் குளோஸில் (Redhill Close) அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

61 வயது ஆண் நபர் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார். இது குறித்து, மார்ச் 17- ஆம் திகதி அன்று காலை 10.50 மணியளவில் சிங்கப்பூர் பொலிஸாருக்கு (Singapore Police Force) தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் 61 வயது ஆண் நபர் உடலில் பல்வேறு காயங்களுடன், சுய நினைவின்றி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

உடனடியாக, மருத்துவர்களை அழைத்து அவரைப் பரிசோதித்தனர். அதில், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவருடன் வசித்து வந்த 59 வயது ஆண் நபர் தான் முதியவரை கொலை செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைதான நபரை மார்ச் 18- ஆம் திகதி அன்று காலை குற்றவியல் சட்டத்தின் 302 (1) பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொலிஸார் அவர் மீது கொலை குற்றச்சாட்டை முன் வைக்க உள்ளனர்.

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!