சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு முறைப்பயணமாக கடந்த 25ம் திகதி இந்தியா சென்ற ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ்க்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு சென்ற ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்தினார்.
ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர் கடையில், தேநீர் அருந்திய புகைப்படங்களை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரகம் தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ருசியான கப் தேநீர் இல்லாமல் இந்தியாவை எப்படி சுற்றிப்பார்க்க முடியும்?. தெரு முனையில் உள்ள டீக்கடைக்கு பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ்யை நாங்கள் அழைத்துச் சென்றோம். நீங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டும்! இந்தியாவின் உண்மையான சுவை இது தான் எனக் ஜெர்மனி தூதரகம் கூறியுள்ளது.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இந்த புகைப்படம் நாட்டில் உள்ள பணக்காரர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.