கூகுளில் அதிபர் கிம்மின் பெயரை தேடிய புலனாய்வு அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்!
தனக்கு கொடுக்கப்பட்ட இணைய சேவைகளை அதிகார துஷ்ப்ரயோகம் செய்ததால் வட கொரிய புலனாய்வு அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
வட கொரியா எப்போதுமே தனக்கென மிகவும் கட்டுப்பாடான விதிமுறைகளை வைத்திருக்கும் நாடாகும். யாரேனும் விதிகளை மீறினாலோ, இல்லை அரசுக்கு எதிரான காரியங்களை செய்தாலோ கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.
அங்கே மரண தண்டனை கூட சாதாரண விஷயம் தான் என தெரியவந்துள்ளது. அந்தவகையில் தற்போது வட கொரியா நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் பெயரை கூகுளில் தேடிய புலனாய்வு அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரியவந்துள்ளது.
மேலும் இதற்கு முன்னதாக அனைத்து உள் மற்றும் வெளிப்புற மின்னணு தகவல் தொடர்புகளையும் கண்காணிக்கும் ஆட்சியின் ரகசிய பணியகத்தின் பல முகவர்கள், அங்கீகாரம் இல்லாமல் இணையத்தில் உலாவும்போது பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.