ஆசியா செய்தி

குறுந்தூர ஏவுகணையை ஏவி சோதனை செய்த வடகொரியா!

வடகொரியா இன்றைய தினம் குறுந்தூர ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்கு கடற்கரையில் உள்ள கடல் பகுதியில் குறித்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கிம் ஜொங் உன்னின் சகோதரி அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு இராணுவபயிற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் ஏவுகணை பரிசோதனை செய்யவுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரம் இவ்வாண்டின் சில மாதங்களிலேயே வடகொரியா பெருமளவான ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி