கிளிநொச்சியில் கால்நடைகளுக்கு பரவும் வைரஸ் நோய்
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் வைரஸ் நோயினால் கடந்த சில தினங்களில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில் கால்நடைகளின் தோலில் கட்டிகள் தோன்ற ஆரம்பித்து, பின்னர் அவைகளின் உடல் முழுவதும் பரவி, பின்னர் அவை வெடித்து காயங்களை ஏற்படுத்தி, சில கால்நடைகள் உயிரிழந்ததாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நிலைமை காரணமாக கரைச்சி, கல்முனை, பெரியமடு, இராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகளின் பால் கறக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மாவட்டத்தில் படிப்படியாக மாட்டுப் புற்று நோய் பரவி வருவதாக கால்நடை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கால்நடை மருத்துவ மனைகளில் நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பு இல்லாததால் பதற்றம் நிலவி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.