கடன்கார நாடானது அமெரிக்கா – வல்லரசு நாட்டின் பரிதாபம்
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக உள்ள அமெரிக்கா கடும் நெருக்கடியான நிலைக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்கா அதிக கடன் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் அதிகரித்து வரும் கடன் சுமை மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. சீனா மற்றும் ஜப்பானுக்கு மிக அதிக அளவிலான கடன் தொகையை அமெரிக்கா திரும்ப அளிக்க வேண்டியுள்ளது.
இதில் அமெரிக்காவின் கடன் சுமை 31.64 லட்சம் கோடி டாலராக உள்ளது. இந்த கடன்களில் 14.7 (1.1 லட்சம் கோடி டாலர்) சதவீதம் கடன் அளித்துள்ள ஜப்பான், அமெரிக்காவுக்கு அதிக அளவு கடன் கொடுத்த நாடுகளில் முதலாவதாக திகழ்கிறது.
இதையடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவின் பங்கு 11.9 சதவீதமாக உள்ளது.
மேலும் மூன்றாவது இடத்தில் 8.9 சதவீதம் பிரித்தானியாவின் பங்காகவும், நான்காவது இடத்தில் 4.8 சதவீதம் வீழ்ச்சியத்தின் பங்காகவும் உள்ளது. இதில் இந்தியா பதினோராவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.