உயர் தர பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களின் பரிதாப நிலை
உயர் தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏறபட்டுள்ளது.
மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து குழப்ப வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
(Visited 11 times, 1 visits today)





