Tamil News

உக்ரைனுக்கு ஐந்து MiG போர் விமானங்களை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ள ஜேர்மனி !

உக்ரைனுக்கு 5 MiG ஜெட் விமானங்களை அனுப்பவதற்கான போலந்தின் கோரிக்கைக்கு ஜேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது.

கிழக்கு ஜேர்மனியின் மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஜேர்மனி அனுமதி அளித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தைப் பெற்ற சில மணிநேரங்களில் பெர்லின் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளது.

பனிப்போர் காலத்தைச் சேர்ந்த ஐந்து MiG-29 போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப அனுமதி கோரி ஜேர்மனியிடமிருந்த வந்த போலந்தின் முறையான கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (13) உறுதி செய்துள்ளது.

ஜேர்மன் விதிகளின்படி, இந்த விமானங்களைப் பெறும் நாடு அவற்றை மூன்றாம் நாட்டிற்கு அனுப்ப விரும்பினால், அது விற்கும் ஆயுதங்கள் பெர்லினிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

Bulgaria

பெர்லின் இது குறித்து முடிவெடுத்த பிறகு, பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius, “மத்திய அரசாங்கத்தில் உள்ள நாங்கள் ஒன்றாக இந்த முடிவை எடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன். ஜேர்மனியை நம்பலாம் என்பதை இது காட்டுகிறது! என்று கூறினார்

போலந்து ஏற்கனவே எட்டு ஜெட் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.

ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக சிறந்த முறையில் பாதுகாக்க போர் விமானங்களை வழங்குமாறு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது.இன்னும் ஒரு டஜன் ஜெட் விமானங்கள் போலந்தில் இருப்பதாக Duda-வின் பாதுகாப்பு ஆலோசகர் Jacek Siewiera தெரிவித்தார்.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்டோரியஸ், இந்த மிக் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்புவது அர்த்தமுள்ளதாக இருந்தாலும், பெர்லினின் முடிவு மேற்கத்திய தயாரிப்பு ஜெட் விமானங்களை வழங்குவதற்கான கொள்கையில் மாற்றத்தைக் குறிக்கவில்லை என்று கூறினார்.

Exit mobile version