இலங்கை கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும்.
இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)