இலங்கை

இலங்கையில் சோகம் – நண்பியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யுவதி மரணம்

புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதி ஒருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த அயோத்திய தேசானி என்ற 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும், புத்தளத்தில் உள்ள தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார்.

திருமண நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட யுவதி, திருமண விருந்தை சாப்பிட்டதன் பின்னர் தனது உடல்நிலை சரியில்லை எனவும், உடனடியாக தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் நண்பியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இவ்வாறு முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது குறித்த யுவதி திடீரென சுகயீனமடைந்ததுடன், அவர் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அந்த யுவதி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவியின் சில உடல் அவையங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்