இந்தோனேசியன் கால்பந்து மைதானத்தில் 135 பேர் பலியான சம்பவம்; இரு அதிகாரிகளுக்கு சிறை
இந்தோனேஷியாவில் கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரத்தில் பலர் பலியான சம்பவம் தொடர்பில், இரண்டு அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங்கில் அரேமா எஃப்சி மற்றும் பெர்செபயா சுரபயா அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது.அப்போது திடீரென கலவரம் வெடித்தது. ஆடுகளத்திற்குள் பலர் புகுந்தனர். இதனால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது பார்வையாளர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து தப்பிக்க மக்கள் அலறியடித்து ஓடினர். அதில் ஏற்பட்ட மோதலில் 135 பேர் பலியாகினர். இது உலகின் மிக மோசமான விளையாட்டு பேரழிவுகளில் ஒன்றாக கருதப்பட்டது.
இந்த நிலையில், துயர சம்பவத்திற்கு காரணமானவர் போட்டி அமைப்பாளர் அப்துல் ஹரிஸ் மற்றும் மைதான பாதுகாப்பு அதிகாரி சுகோ சுட்ரிஸ்னோ ஆகிய இருவரும் அலட்சிய குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டனர்.அவர்களுக்கு ஒன்றரை ஆண்டும், மேலும், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.