இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 28 சீன பிரஜைகள் இலங்கை பொலிசாரால் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 28 சீன பிரஜைகளை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களில் ஐந்து சீன பெண்களும் அடங்குவர். கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடம் ஐந்து மடிக்கணினிகள் மற்றும் பல ஸ்மார்ட்போன்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
மோசடி கும்பல் பற்றி INTERPOL ஆல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கி, அளுத்கமவில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சந்தேகநபர்கள், சீனாவில் இருந்தபோது, இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்களை ஏமாற்றி இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நீண்ட விசாரணைகளை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)